சினிமாவில் அசாதாரணமான திறமைகளை வைத்திருப்பவர்கள் அதை வெளிகாட்டி தற்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வருகின்றனர் அந்த வகையில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து பின்னாட்களில் ஹீரோவாக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ்.
ஹீரோவாக வெற்றி மேல் வெற்றியை ருசித்து வருகிறார் இவர் நடித்த காமெடி கலந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அதிரி புதிரியான ஹிட்டடித்தது மேலும் அது போன்ற சிறப்பம்சம் உள்ள படங்களையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஜிவி பிரகாஷ் கையில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் வைத்துள்ளார் ஐயங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க நேரமில்லை, பேச்சிலர் போன்ற பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து இவரது நடிப்பில் வெளியாக இருகின்றன.
மேலும் டாப் நடிகரின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார் உள்ளார். இசையின் முலம் பல முன்னணி நடிகரின் படங்களுக்கு இசையமைத்து வெற்றிக்கு உருதுணையாக இருந்து வருகிறார். இதனால் இரண்டு பக்கமும் சம்பாதிப்பது பெரும் புகழையும் அள்ளிகொண்டு வருகிறார்.
இந்தநிலையில் சாலை ஓரத்தில் ஒருவர் நாதஸ்வரம் வாசிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டார் அது வைரலானது அதை பார்த்த ஜிவி பிரகாஷ் அவரது திறமையாக வியந்து போனார்.
இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால் நாம் அவரை பாடல் பதிவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் குறிப்பாக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன என அந்த வீடியோவுக்கு ரீட்வீட் செய்துள்ளார்.
இச்செய்தி தற்பொழுது அவரது ரசிகர்களையும் சந்தோஷப்பட வைத்துள்ளது.
அந்த விடியோவை நீங்களே பாருங்கள்.
If we could find this person . We could use him for recordings . So talented and good precision on the notes … talented https://t.co/79LcQrrZpj
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2021