அஜித்துக்கு பிடிக்கவில்லை என்றால் அதை செய்யாதீர்கள் – பேட்டியில் சொன்ன வெங்கட் பிரபு.

ajith-and-vengat-prabhu
ajith-and-vengat-prabhu

தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுக்கும் நடிகர்கள் பலரும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு சினிமா உலகில் வெற்றியை காண ஆசைப் படுவது வழக்கம் ஆனால் இதில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் அஜித். தற்போது இவர் உச்ச நட்சத்திரமாக இருக்க   ரசிகர்கள் காரணமாக இருந்தாலும் அதற்காக ரசிகர்கள் குடும்பத்தை விட்டுவிட்டு என் படத்தைப் பார்க்க வேண்டாம்.

எனக்கு ரசிகர் மன்றமே தேவையில்லை எனக் கூறியே கலைத்துவிட்டார் மேலும் ரசிகர்கள் அவரவர் வேலையை முடித்து விட்டு ஃப்ரீயாக இருக்கின்ற நேரங்களில் எனது படத்தை பார்த்தால் போதும் என பெருந்தன்மையுடன் கூறுவதே இந்த காலகட்டத்தில் எந்த ஒரு நடிகருக்கும் வராத தன்மை. அந்த காரணத்தினாலேயோ என்னவோ lதற்போது ரசிகர்கள் அஜித்தை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்.

அஜித்தும் அதற்கேற்றார்போல சிறந்த படங்களை கொடுப்பது மற்றும் ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக அஜித் துப்பாக்கி சுடுதல், பிரியாணி சமையல், பைக் மற்றும் கார் ரேஸ், ட்ரோன் இயக்குதல் என ரசிகர்களுக்கு முன் மாதிரியாக இருப்பதால் அஜித் ரசிகர்களும் அதை முயற்சித்து வருகின்றனர் இப்படி ஓடி கொண்டிருக்கும்  அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

திடீரென அஜித் ஒரு புதிய அறிக்கை வெளியிட்டு ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது இனி என்னை யாரும தல, அல்டிமேட் ஸ்டார், காதல் மன்னன் என்ற அடைமொழி பெயரை வைத்து அழைக்காமல் தன் தாய் தந்தை வைத்த அஜித், அஜித் குமார்  போன்ற பெயர்களை வைத்துக் கூப்பிட்டால் போதும் என கேட்டுக்கொண்டுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்த நிலையில் மாநாடு படத்தை இயக்கி வெற்றி கண்ட வெங்கட் பிரபு சமீபத்தில் பிரபல செய்தி சேனல் ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது அவரிடம்  கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது அஜித் இனி தல என்ற பெயரை வைத்து கூப்பிட வேண்டாம் என கூறியதை கேள்வியாக கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு அப்படி அவர் சொன்னால் அவரது தாய் தந்தை வைத்த பெயரான அஜித், அஜித் குமார், AK என கூப்பிடுங்கள் அதை விட்டுவிடுங்கள் அவருக்கு விருப்பம் இல்லாத செயலை ஏன் செய்கிறீர்கள் என சொன்னார். அஜித் ரசிகர்கள் அவர் மீது அதிக பற்று வைத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் செல்லமாக தல என்று கூப்பிட்டு பழக்கப்பட்டு விட்டார்கள் சிறிதுகாலம் ஆகும் ஏன் எனக்கு தல என்ற வார்த்தை தான் முதலில் வருகிறது சிறிது நாட்கள் ஆகும் ஆனால் மாற்றிக்கொள்வது நல்லது என கூறியுள்ளார்.