விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் வருடம் வருடம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது என்ற தகவலை தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகிய வருகிறது.
அதாவது பிக்பாஸ் சீசன் 5 பெரிதாக பிரபலமடையாமல் டிஆர்பி-யில் பெரிதும் தோல்வியை அடைந்த நிலையில் சீசன் 6வது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் விரும்பும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல மாற்றங்களுடன் ஒளிபரப்ப இருக்கிறார்கள். லோகோ முதல் வீடுகளின் அமைப்பு மற்றும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை என அனைத்தும் வித்தியாசமாக இருந்து வருகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியில் முதன்முறையாக பொதுமக்கள் இரண்டு பேர் கலந்து கொள்ள இருக்கிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் திவ்யதர்ஷினி என்ற டிடி ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் அதே நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்த ரோஷினி ஹரி பிரியனும் கலந்துக்கொள்ள இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இவர்களை தொடர்ந்து மைனா நந்தினியும் கலந்து கொள்ள இருக்கிறாராம் பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம் ஆனால் தற்பொழுது அதிகபடியாக விஜய் டிவி பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் மைனா நந்தினி.
இந்த சீரியலிற்கு பிறகு தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் மேலும் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில் மைனா நந்தினி எப்பொழுதும் மிகவும் கலகலப்பாக பேசி வரும் பழக்கமுடையவர் என்பதால் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.