இவரை நம்பினால் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும்..! கமலை விட்டு விலகும் பிரபலங்கள்..!

kamal-01
kamal-01

தமிழ் திரைப்பட நடிகராகவும் பிரபல அரசியல் கட்சியின் தலைவராகவும் விளங்கிவருவர் தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று போற்றப்படும்  நடிகர் ஆவார் அந்தவகையில் இவ்வாறு ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மதுரை மைதானத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தனது முதல் அரசியல் கட்சி கூட்டத்தை கூட்டி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  முன்னிலையில் தன்னுடைய கட்சிக்கு மக்கள் நீதி மையம் என பெயர் வைத்து தொடங்கப்பட்டது.

மேலும் கட்சி தொடங்கிய ஒரே வருடத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மையம் போட்டியிட்டு 40 தொகுதிகளில் நின்றது மட்டுமில்லாமல் 3.7 சதவீத வாக்குகளை பெற்று சாதனை படைத்தார். மேலும் இந்த தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ கட்சி மற்றும் இன்னும் சில கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டார்.

மேலும் அரசியலுக்கு சரியான ஆரம்ப இல்லாத காரணத்தினால் தற்போது அரசியலை ஒதுக்கிவிட்டு திரை துறையில் அதிக அளவு ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இனிமேல் கமல் அரசியலுக்கு செட் ஆக மாட்டார் என்று அவர்களுடன் கூட்டணியில் இருந்த பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் ஒவ்வொருவராக தனது கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல் தளபதி விஜயின் அறுபத்தி எட்டாவது திரைப்படம் மற்றும் சூர்யாவின் திரைப்படம் ஜெயம் ரவி திரைப்படம் என பல திரைப்படங்களை தயாரிக்க உள்ளார்.

இதனால் கமலஹாசனை அனைவரும் உலக நாயகனாக தியேட்டரில் பார்க்க தான் ஆசையாக இருக்கிறது அவரை மக்கள் நீதி மைய தலைவராக மேடையில் பார்க்க ஆசை இல்லை என பலரும் தெரிவித்து வருகிறார்கள்