தற்போது தமிழ் சினிமாவில் வெளிவரும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் அதனை விமர்சிக்கும் நபர்களின் எண்ணிக்கையும் தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது அந்த வகையில் பல ஆண்டுகளாக திரைப்படங்களை விமர்சித்து வருபவர் தான் சுரேஷ்குமார்.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ஆவார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய பொழுது வடசென்னை படத்தை பற்றியும் அவற்றில் உள்ள காட்சியை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்து இருப்பார் மேலும் இத் திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்ற சூப்பர் ஹிட் அடித்தது இந்நிலையில் இத்திரைப்படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக சுரேஷ் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் இந்த திரைப்படத்திற்கு தேவையற்றது என்றும் பெண்கள் இதை பார்த்தால் முகம் சுழிக்க தான் செய்வார்கள் என்றும் சுரேஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதேபோல இந்த திரைப்படத்தில் புகைப்பிடித்தல் மற்றும் தண்ணி அடிப்பது போன்ற காட்சிகளும் இருக்கிறது இது உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறிக் கொண்டு வரும் வகையில் இந்த திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சிகள் வைப்பது எதற்கு மேலும் இது தனக்கு மட்டுமின்றி மக்களின் கருத்து என்றும் கூறியுள்ளார்.
அந்த வகையில் தான் ஏதேனும் திரைப்படம் இயக்கினார் இது போன்ற காட்சிகள் கண்டிப்பாக என்னுடைய திரைப்படத்தில் இருக்காது ஆகையால் இது போன்ற திரைப்படங்கள் இயக்குவதன் மூலமாக ரசிகர்களின் அந்த வகையில் தூண்டுவிக்கும் வகையில் இருக்கிறது என்றும் நமது சுரேஷ் கூறியுள்ளார் .
அப்படியே நீங்கள் ரியாலிட்டி ஆக திரைப்படம் இயக்க வேண்டும் என்றால் இதில் இடம்பெற்ற முதல் இரவு காட்சி யையும் ரியாலிட்டி ஆக காட்ட வேண்டியதுதானே என நெட்டிசன்கள் இணையத்தில் கோக்குமாக்கா கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Ivlo Keezh Thanama padam edupaara…Top 10 #Suresh About #Vetrimaran pic.twitter.com/r34jFxgG7x
— chettyrajubhai (@chettyrajubhai) September 8, 2021