சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவருடைய வளர்ச்சியை பார்த்து பலரும் பூரித்துப் போகும் அளவிற்கு தன்னுடைய திறமையை திரை உலகில் வெளிக்காட்டி உள்ளார்.
அந்த வகையில் இதுவரை 100 கோடியை தொட்ட திரைப்படங்கள் என்றால் அது விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற மூத்த நடிகர்களின் திரைப்படமாக இருக்கும் ஆனால் இவை அனைத்தையும் முறியடிக்கும் வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து முன்னணி நடிகர்கள் மனதில் பீதியை உண்டாக்கி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகாக தியேட்டரில் ஒரு நல்ல படம் மக்கள் பார்த்தார் என்றால் அது டாக்டர் திரைப்படம் தான் அந்த வகையில் டாக்டர் திரைப்படமானது தியேட்டரில் ஐம்பது சதவீத இருக்கை அனுமதிப்பில் கூட இப்படி சாதித்துக் காட்டியது ஒரு பாராட்ட கூடிய விஷயமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் கூட ஓரளவு சுமாரான திரைப்படமாக தான் அமைந்துள்ளது என ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் நமது இயக்குனர் சிவாவை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்கள் இனிமேல் சீரியல் எடுக்கலாம் என அவரை கலாய்த்து வருகிறார்கள்.
ரஜினியின் தீவிர ரசிகனான சிவகார்த்திகேயன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியிட்ட பதிவானது என்று சமூக வலைதளப் பக்கத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது அந்த வகையில் சிவகார்த்திகேயன் அண்ணாத்த படம் வேற லெவல் தலைவா வேற ரகம் என இஷ்டத்துக்கு ரஜினியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன் புகழ்வதற்கு ஒரு நியாயம் வேண்டாமா இப்படியா ஜால்ரா அடிப்பது என சிவகார்த்திகேயனை கிண்டல் செய்து வருகிறார்கள். ஏனெனில் சிவகார்த்திகேயன் போன்ற பல்வேறு பிரபலங்கள் இத்திரைப்படத்தைப் பற்றி பில்டப் செய்து பேசுவதன் மூலமாக ரசிகர்கள் படத்தைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்தை அடைகிறார்கள். ஆகையால் நீங்கள் வாயை திறக்காமல் இருந்தால் படம் நன்றாக ஓடும்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் திரைப்படம் நன்றாக இருக்கிறது என ஒரு சிலர் கூறிய நிலையில் படம் சுமார் தான் என ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள் ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள் வசூல் நன்றாக தான் இருக்கிறது என்று கூறி உள்ளார்கள்.