தமிழில் திரைப்படம் நடித்தால் இனிமேல் அஜித் சாருடன் தான்..! விஜய் வசனத்தை கூறி உசுப்பேற்றும் பிரபல நடிகை..!

ajith-22
ajith-22

தமிழ் சினிமாவில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நஸ்ரியா இவ்வாறு பிரபலமான நமது நடிகை அழகான வட்டமான முகத்தோற்றம் கொண்ட நடிகை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருடைய க்யூட்டான முகத்திற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

இந்நிலையில் நமது நடிகை ஏகப்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் இவருடைய ரியாக்சன் மற்றும் எக்ஸ்பிரஷன் இளசுகளுக்கு வரப்பிரசாதம் போல் அமைந்து விட்டது. அந்தவகையில் இவர் நடித்த திரைப்படங்களில் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது ராஜா ராணி திரைப்படம் தான்.

அதுமட்டுமில்லாமல் ராஜா ராணி திரைப்படம் தான் நஸ்ரியாவுக்கு தமிழில் கிடைத்த கடைசி திரைப்படம் ஆகும்.  இந்த திரைப்படத்தில் நமது நடிகை நைட்டி அணிந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை என் ஆசை மைதிலியே என்ற பாடலுக்கு நடனமாடும் காட்சியானது இன்றும் ரசிகர்களால் இணையத்தில் ரசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நடிகை நஸ்ரியா தற்போது பிரபல நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணம் முடிந்த கையோடு சினிமாவிற்கு டாட்டா காட்டிய நமது நடிகை மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது. அந்தவகையில் சமீபத்தில் பிரபல நடிகர் நானி உடன் அடடா சுந்தரா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நஸ்ரியா விடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது அப்பொழுது விக்ரம் திரைப்படம் பற்றி விசாரித்த நிலையில்  என்னும் நான் கமல் சாரின் விக்ரம் திரைப்படத்தை பார்க்கவில்லை என்று கூறியது மட்டுமில்லாமல் இன்று நான் பார்க்க போகிறேன் என்றும் கூறி உள்ளார்.

nasriya-1
nasriya-1

அதேபோல நான் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ஆகையால் தமிழில் திரைப்படம் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் அஜித் சார் கூட நடிக்கணும் என்று கூறி i am waiting என்ற விஜய்யின் பிரபலமான வசனத்தை பதிவிட்டிருந்தார். இவ்வாறு அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.