விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் காமெடி கலாட்டா ஆக்சன் என அனைத்தும் கலந்து ரசிகர்களை கவரும் வகையில் அமையும்.
அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது பொதுவாக இவருடைய படங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் இருப்பதால் இவருக்கு ரசிகர்களில் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம்.
இவ்வாறு தொடர்ந்து வெற்றியை கொண்டு வந்த சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. மிகவும் வித்தியாசமாக இருக்கும் எனவும், சிவகார்த்திகேயன் படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகவும் ஆர்வமாக காத்து வந்தார்கள் ஆனால் வெளியான முதல் நாளே படம் கலவை விமர்சனத்தை பெற்றது.
மேலும் பிரின்ஸ் திரைப்படம் வெளியான அதே நாளில் நடிகர் கார்த்திக்கின் சர்தார் படம் வெளியான நிலையில் இந்த பிரின்ஸ் திரைப்படத்தினை ஓவர் டேக் செய்தது சர்தார் திரைப்படம் நல்ல விமர்சனத்தையும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியும் பெற்று இருக்கிறது. ஆனால் பிரின்ஸ் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது.
இவ்வாறு வசூல் ரீதியாக சரிவினை சந்தித்துள்ளது பிரின்ஸ் திரைப்படம். இப்படிப்பட்ட நிலையில் இதற்கும் மேல் பிரின்ஸ் திரைப்படத்தினை நம்பினால் வேலைக்காகாது என பல திரையரங்குகள் கன்னட படமான காந்தாராவை ரிலீஸ் செய்ய ஆரம்பித்துள்ளார்களாம்.
இவ்வாறு படும் தோல்வியினை சந்தித்துள்ள பிரின்ஸ் திரைப்பட குழுவினர்கள் போட்ட பணத்தினை எடுத்துள்ளார்கள் என்றும் பெரிதாக நஷ்டத்தை சந்திக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. எப்படியோ முதலுக்கு மோசம் இல்லாமல் சிவகார்த்திகேயன் தப்பித்திருக்கிறார்.