ஆண்டவருக்கு விக்ரம் என்றால் விக்ரமுக்கு கோப்ரா தான்..! மேடையில் அதிர வைக்கும் உதயநிதி பேச்சு..!

vikram-cobra
vikram-cobra

சமீபத்தில் திரையரங்கில் வெளியாகிய மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் என்றால் அது விக்ரம் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கமலஹாசன் நடித்திருப்பார் மேலும் இயக்குனராக இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை கமல் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய பிரபலங்களாக கருதப்படும்  விஜய் சேதுபதி, சூர்யா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் பல்வேறு சின்னத்திரை நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் நடித்த சிறப்பித்து கொடுத்தார்கள் என்று சொல்லலாம்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து திரை உலகில் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் என்றால் அது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படம் தான் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுர்த்தை அவர்கள் தான் இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள் ஆனால் விக்ரமுக்கு உடல் நலக்குறைவின் காரணமாக இந்த ஆடியோ லாஞ்சில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டார் அந்த வகையில் வெளியான திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படம் கமலுக்கு எந்த அளவிற்கு வெற்றி கொடுத்ததோ அதேபோல இந்த கோப்ரா திரைப்படம் விக்ரமுக்கு மாபெரும் வெற்றி கொடுக்கும் என கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் விக்ரம் மகனை பள்ளி படிக்கும் பொழுது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த பையனை நன்றாக நோட் பண்ணிக்கோ  கண்டிப்பாக இந்த பையன் மிகப்பெரிய ஹீரோவாக வருவான் என்று கூறியதை மேடையில் கூறி  பெருமிதம் கொண்டார்.