விஜய் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்தால் “டைட்டில்” இதுதான் – பிரபல இயக்குனர் பேட்டி.!

vijay
vijay

தளபதி விஜய்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான் குறிப்பாக அந்த படங்கள் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடுகிறது இப்பொழுது கூட இவர் தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் பலர் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தளபதி 67.

படத்திலும் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுக்க இருக்கிறார் என ரசிகர்கள் இப்பொழுது சொல்லி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி  வருகிறது அது குறித்து விலாவாரியாக தற்போது நாம் பார்ப்போம்.

தளபதி விஜய் இயக்குனர் அட்லீ உடன்  மூன்று படம் பண்ணினார் அதில் இரண்டாவது படமான மெர்சல் படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது  இந்த படத்திற்காக இயக்குனர் அட்லீ பிரபல தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் கலந்து கொண்டார் அப்பொழுது அட்லீயிடம் விஜய் CM மாக நடிக்கும்..

படத்திற்கு டைட்டில் என்னவாக இருக்கும் என கேட்டனர் அதற்கு பதில் அளித்தவர் விஜய் CM மாக நடித்தால் அந்த படத்திற்கு “ஆளப்போறான் தமிழன்” என்ற டைட்டில் வைப்பேன் என கூறினார். இந்த செய்தி பழைய செய்தியாக இருந்தாலும் தற்பொழுது அந்த வீடியோ விஜய் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.