உலகை ஒரு பக்கம் கொரோனா வாட்டி வதைக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இதனால் மக்கள் எப்படி வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனரோ அதுபோல சினிமா பிரபலங்கள் படப்பிடிப்பை தொடங்க முடியாமல் தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
வீட்டில் போரடிக்காமல் இருக்க நடிகைகள் பலரும் போட்டோ ஷூட்டை ஆயுதமாக கையில் எடுத்து எடுத்து இருக்கின்றனர் ஆனால் ஹீரோ, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் தன்னுடைய பழைய நினைவுகள் மற்றும் சினிமாவில் தன்னுடைய நீண்ட நாள் கனவு ஆசையை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி தனக்கு பிடித்த ஒவ்வொன்றையும் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக கூறி வருகின்றனர் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை கையில் வைத்திருக்கும் மிஷ்கினும் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும் போது தனது ஆசையையும் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து அவர் விவரித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு மிக பொறுமையாக பதில் அளித்து வந்தார். ரசிகர் ஒருவர் விஜயுடன் இணைந்தால் எந்த மாதிரியான பாணியில் படம் பண்ணுகிறீர்கள் என கேட்டதற்கு நல்ல ஸ்பை திரில்லர் போன்ற ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ஒரு படம் பண்ணுவேன் என குறிப்பிட்டார்.
மேலும் பேசிய இயக்குனர் யூத் படத்தில் விஜய்யின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்து விட்டதாகவும் குறிப்பிட்டார் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த நினைவுகளையும் இங்கு கூறினார்.