தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் இப்பொழுது கூட “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து படம் பண்ணவும் திட்டமிட்டு இருக்கிறார்.
இப்படி ஓடும் விஜய் மறுபக்கம் அரசியலில் இறங்குவதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். விஜய் சமீப காலமாக மேடை நிகழ்ச்சிகளில் அரசியல் பற்றி பேசி வருகிறார் மற்றும் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை கூப்பிட்டு அடிக்கடி சந்தித்து அரசியல் சம்பந்தமான பேச்சுகளையும் பேசி வருகிறார்.
இதனால் அவர் வெகு விரைவிலேயே அரசியலில் களம் இறங்குவது உறுதி.. ஏன் நேற்று கூட அம்பேத்கர் பிறந்த நாளில் கூட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது இப்படி தொடர்ந்து அரசியல் சம்பந்தமான வேலைகளில் விஜய் தலையிடுகிறார் இதனால் அவரைப் பற்றிய பேச்சுக்கள் உலா வருகின்றன.
இந்த நிலையில் பிரபல நடிகரும், கதாசிரியருமான ரமேஷ் கண்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதாவது ரமேஷ் கண்ணா எம்ஜிஆரின் மிக நெருங்கிய உறவினர் என்பதால் அவரிடம் நிருபர் நீங்கள் கட்சி தொடங்க விருப்பம் உண்டா என கேட்டார்.
அதற்கு ரமேஷ் கண்ணா.. நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும் நானும் கட்சி தொடங்குகிறேன். ரஜினி, அஜித் போன்றவர்கள் அரசியலுக்கு வரட்டும் நான் வருகிறேன் என்று வெளிப்படையாக கூறினார். ரமேஷ் கண்ணா சினிமா நடிகராக இருந்தாலும் எம்ஜிஆரின் நெருங்கிய சொந்தங்களில் ஒருவர்.. ஆம் எம்ஜிஆரின் மனைவி ஜானகியின் மாமன் தான் ரமேஷ் கண்ணாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.