இத மட்டும் நான் பண்ணவில்லை என்றால் ஏன் மூஞ்சில் நானே காரி துப்புவது போல் ஆகிவிடும்..! ஆண்டவரின் ஆவேச பேச்சு..!

vikram-3
vikram-3

தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பிரபலமான இயக்குனராகவும் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான இயக்குனர் அடுத்ததாக எப்போது திரைப்படம் எடுப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ஆனது திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கமலஹாசன் அவர்கள் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் விஜய்சேதுபதி, சூர்யா, பகத் பாசில் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு பிரபலங்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் அழைத்து அவர்களுக்கு கறி விருந்து வைத்துள்ளார்.

அப்பொழுது பேசும்பொழுது தளபதி 67வது திரைப்படம் பற்றியும் பேசி உள்ளார். அதாவது லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கப்போகும் திரைப்படமும் நம்மளுடைய திரைப்படம் தான் அதில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் என்னிடம் கேளுங்கள். அந்த திரைப்படம் முடிந்த பிறகு விக்ரம் மூன்று வந்தால் எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

என்று கூறியது மட்டுமில்லாமல் தளபதியின் அடுத்த திரைப்படத்தை நான் வாழ்த்தாமல் விட்டால் நான் மல்லாக்க படுத்துக்கிட்டு என் முகத்தில் நானே எச்சல் துப்பியது போல் ஆகிவிடும் என கமலஹாசன் அவர்கள் ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் தளபதி 67 ஆவது திரைப்படத்தை பற்றி பெருமையாக பேசியதும் அரங்கம் சற்று அதிர்ந்து போனது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு விஜய் பிறந்த நாளுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.