இந்த படம் ஓடவில்லை என்றால் என் வாழ்நாளில் இனி இசையமைக்கவே மாட்டேன் – திடீரென முடிவெடுத்த இளையராஜா.! அடுத்து நடந்தது என்ன தெரியுமா.?

ILAYARAJA-
ILAYARAJA-

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக பார்க்கப்படுபவர் உலக நாயகன் கமலஹாசன் இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இந்த வருடம் நடித்துவரும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த படமும் கமலுக்கு மிகப்பெரிய ஒரு ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஓடிக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசன் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அந்த வெற்றி படங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது அபூர்வ சகோதரர்கள். இந்த படம் அப்பொழுது வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசன் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருப்பார். அவருடன் கைகோர்த்து கௌதமி, நாகேஷ், மனோரமா, நாசர், ஜெய்சங்கர், ஜனகராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர். உலக நாயகன் கமலஹாசன் முதலில் இந்த படத்தை இயக்க கே பாலச்சந்திரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் கதையைப் பார்த்துவிட்டு கே. பாலச்சந்தர் பயந்து இந்த படம் ஓடாது என கூறினார் அடுத்ததாக சங்கீதம் சீனீவராவிடம் சென்று கமல் கேட்டுக்கொண்டார் அவர் இந்த படத்தின் ஆரம்பத்திலேயே அவர் ஒதுங்க கடைசியாக பஞ்ச அருணாச்சலத்திடம் சென்றது அவர் கதை எழுதி கமலிடம் கொடுக்க இருவரும் சேர்ந்து ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்தனர்.

படம் வெளிவருவதற்கு முன்பாகவே படத்தை பார்த்த இசைஞானி  இளையராஜா அபூர்வ சகோதரர்கள் படம் ஓடவில்லை என்றால் இனி இசையமைக்கவே மாட்டேன் என்று அடித்து கூறினாராம். கடைசியாக படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது.