இந்த வருடத்திற்கான ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது பல முன்னணி வீரர்கள் பல்வேறு அணிகள் சென்று உள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது தற்பொழுது யாரும் கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
மேலும் எந்த அணி வலுவாக இருக்கிறது என்பதையும் கணக்கிட முடியவில்லை ஏனென்றால் எல்லா அணிகளும் சிறந்த அணிகள் ஆகவே தற்பொழுது பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஐபிஎல் ஏலத்தில் விற்கப்பட்ட ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரரான மேத்யூ வேட். தற்பொழுது ஒரு சிறப்பான செய்தியை கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியது என்னை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது சிறப்பான ஒன்று அந்த அணிக்காக சிறப்பாக விளையாடும் என அவர் கூறியுள்ளார் மேலும் பேசிய அவர் சமீபகாலமாக ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடி வரும் சிங்கப்பூர் விளையாட்டு வீரரான டிம் டேவிட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தற்பொழுது மும்பை அணி அவரை 8 கோடிக்கு மேல் தொகை கொடுத்து வாங்கியுள்ளது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர் வருகின்ற உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாக மேத்யூ வேட் கூறியுள்ளார்.
சமீபகாலமாக லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் கண்டு பிடித்து வருகிறது அதில் ஒருவராக டிம் டேவிட் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை அணிக்காக அணிக்காக அவர் எப்படி விளையாடுகிறோ அதை பொறுத்தே அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.