பொதுவாக சினிமாவில் நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு அதிகம் ஆகிவிட்டால் தங்களது சம்பளத்தை உயர்த்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தற்பொழுது உள்ள நடிகர்களில் விஜய் தான் அதிக சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.
அந்தவகையில் பல ஆண்டுகளாக வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரின் சம்பளத்தையே தற்பொழுது விஜய் ஓவர்டேக் செய்து உள்ளார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தர்பார் இப்படம் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையாமல் தோல்வியைத் தழுவியது. இதனை சரிசெய்யும் விதமாக தற்பொழுது அண்ணாத்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தரமாக உருவாக்கி வருகிறாராம்.
இந்நிலையில் கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல்,சர்க்கார்,பிகில் மாஸ்டர் போன்ற படங்கள் அனைத்துமே 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இப்படத்தில் இருந்து இவர் தனது சம்பளத்தை 50 கோடியிலிருந்து 80 கோடியாக உயர்த்தினாராம்.
தற்பொழுது தளபதி 65 ஆவது திரைப்படம் உருவாவதற்கு முதல்கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து உள்ளது. இப்படத்தில் தளபதி 100 கோடியாக சம்பளம் பேசி பிறகு 80 கோடியில் முடித்துள்ளார். இதனால் பழைய சம்பளத்திலிருந்து 20 கோடி ஏயற்றியுள்ளார் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இதனைதொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக தர்பார் படத்தில் 104 கோடி சம்பளம் வாங்கினாராம்.பிறகு அண்ணாத்த திரைப்படத்திற்கு 108 கோடி சம்பளத்திற்கு பேசி முடித்தாராம். ஆனால் சில பிரச்சனையினால் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் குறைத்துக் கொண்டாராம்.
அடுத்த திரைப்படத்தில் கண்டிப்பாக விஜய் 100 கோடியும், ரஜினிகாந்த் 108 கோடியும் சம்பளம் வாங்குவார்கள் என்று சினிமா வட்டாரங்கள் கூறிவருகிறார்கள்.