40 ஆண்டுகளை கடந்து ஐம்பதாவது ஆண்டை நோக்கி செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரையிலும் அவருடைய இந்த சூப்பர் ஸ்டார் பதவியை வேற எந்த நடிகராலும் பெற முடியாமல் இருக்கிறது. அப்படி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி அவர்கள் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் ஒரு மேடையில் ரஜினியை வைத்து எடுத்தால் எந்த படத்தின் சாயலை வைத்து படம் எடுப்பீர்கள் என்று கேட்டதற்கு ரஜினியை வைத்து தளபதி திரைப்படத்தின் சாயலை வைத்து தான் படத்தை எடுப்பேன் என்று அசால்டாக கூறியுள்ளார்.
ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் சாயலை வைத்து கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரஜினியை வைத்து தளபதி படம் போல் எடுத்தாள் நன்றாக இருக்கும் எனக் கூறி வருகின்றனர்.
அதேபோல நடிகர் அஜித்தை வைத்து படம் எடுத்தால் எந்த படம் எடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டனர் அதற்கும் தீனா படத்தின் சாயலை வைத்து தான் அஜித்தை வைத்து படம் பண்ணனும் என்று கூறியுள்ளார் இதைக் கேட்ட அஜித் ரசிகர்கள் மிகவும் உச்சகட்ட சந்தோஷமாகி அரங்கமே அதிர கூச்சலிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி விரலானது.
இப்படி முன்னணி நடிகர்களின் பழைய படங்களின் சாயலை எடுத்தாள் படம் நன்றாக இருக்கும் என இணையதளவாசிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 திரைப்படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அஜித் அல்லது ரஜினியை வைத்து படம் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.