நடிகை நயன்தாராவை விட மிகவும் அழகாக இருக்கிறார் விஜே பார்வதி என ரசிகர்கள் கூறியுள்ளது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா இவர் அஜித் ,விஜய் ,சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதேபோல் நயன்தாரா நடிப்பில் வெளியாகி பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன இந்த நிலையில் சமீபகாலமாக நயன்தாரா நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சோலோ ஹீரோயினாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார் நயன்தாரா சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார் விக்னேஷ் சிவன் வேறு யாரும் கிடையாது நயன்தாராவின் காதலன் தான். இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள் இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
வருகின்ற ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இதற்குமுன் நயன்தாரா-பிரபுதேவா மற்றும் சிம்புவை காதலித்து வந்தார் ஆனால் அந்தக் காதலை பிரேக்கப் செய்துவிட்டு விக்னேஷ் சிவன் அவருடன் நீண்ட காலம் காதலித்து வருகிறார். இவர்கள் காதல் திருமணத்தில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் நயன்தாரா கனெக்ட், லயன், o2, காட்பாதர் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதேபோல் வினேஷ் சிவன் அவர்களும் அஜித்தை வைத்து ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருக்கிறார் அதற்கான பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் vj பார்வதியைப் பார்த்து நயன்தாராவை விட அழகாக இருக்கிறீர்கள் என நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் கலாட்டா மீடியா சார்பாக கலாட்டா கிரவுன் 2022 விருது வழங்கப்பட்டது இந்த விருது விழாவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் கலந்துகொண்டிருந்தார் அதுமட்டுமில்லாமல் நயன்தாராவிற்கு தி எம்பிரஸ் ஆஃ இந்தியன் சினிமா இந்த விருது வழங்கப்பட்டிருந்தது அப்போது பார்வதி நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகிய அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவை விட நீங்கள்தான் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள் அதற்கு விஜே பார்வதி ரொம்ப நன்றி என பதிவிட்டுள்ளார். அதே போல் இன்னும் பல ரசிகர்கள் விஜே பார்வதியைப் பார்த்து நயன்தாராவை விட நீங்கள் தான் அழகு என கூறியுள்ளார்கள் அதற்கும் பதில் அளித்துள்ளார் தற்போது ரசிகர்கள் பார்வதியை அழகு மழையில் நனைய விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.