சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ஆனது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிதான்.
ஏனெனில் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள காவல்துறை அதிகாரியின் பெயர் வன்னியர் சங்கத் தலைவரின் பெயரை வைத்தது மட்டும் இல்லாமல் அவருடைய வீட்டில் அக்னி கலசம் காலண்டரை மாட்டி உள்ளார்கள்.
இதன் காரணமாக வன்னியர் சங்க உறுப்பினர்கள் பலரும் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமில்லாமல் எங்கள் சமூகத்தினரை இழிவு படுத்தி உங்கள் திரைப்படத்தில் காட்டி உள்ளீர்கள் என்ற காரணத்தினால் அவர் மீது வழக்கு தொடர்ந்தது மட்டும் இல்லாமல் 5 கோடி அவதாரம் கேட்டு வருகிறார்கள்.
இதை தொடர்ந்து சமீபத்தில் பாமக கட்சியின் செயலாளர் சிவகுமார் அவர்கள் சூர்யாவை எட்டி உதைத்தாள் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக கொடுப்பேன் என அவர் வெளியிட்ட அறிக்கை எனது சமூக வலைதள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் குழப்பத்தையும் ஏற்படுத்தி விட்டது.
அதுமட்டுமில்லாமல் தற்போது முதல்வர் என்ற திரைப்படம் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் வாழும் ஒட்டுமொத்த வன்னிய மக்களை ஒன்று திரட்டி அக்னி குண்டத்தில் நடிகர் சூர்யாவின் படத்தை எரித்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அக்னி குண்டத்தில் சூர்யாவின் படத்தை எரிப்பதற்கு அரை பவுன் அக்னி கலசம் பதித்த தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் அதுமட்டுமில்லாமல் தஞ்சை மாவட்டத்திற்கு வந்தால் அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கி அவருக்கு பெண்களால் சானி பால் அபிஷேகம் செய்வோம் என மாநில வன்னியர் சங்க துணை தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்