பிரபல சீரியல் நடிகரை காப்பாற்றிய தளபதி விஜய்.! அன்று அவர் இல்லை என்றால் நான் இல்லை.! பேட்டியில் உண்மையை சொன்ன பிரபலம்.

vijay

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் தளபதிவிஜய் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் கமிட்டாகி வெற்றியை தேடிக் கொண்டு ஓடுகிறார் அந்தவகையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் அமைக்க இருந்தது ஆனால் சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் படக்குழு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது இதற்கிடையே அடுத்த படத்திற்கான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தற்போது தேர்வு செய்து உள்ளார் நடிகர் விஜய்.

ஒரு படம் முடிந்தவுடன் அடுத்த படத்தை உடனே தொடங்கும் வேலையை முன்பே செய்து விடுவார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடதக்கது. தொடர்ந்து சினிமாவில் பல வெற்றிகளை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க ரெடியாக வருகிறார். இப்படி இருக்க விஜய் பற்றிய செய்தி ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தளபதி விஜய்க்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களில் ஒருவராக நெருங்கிய நண்பராக இருப்பவர் நடிகர் சஞ்சீவ். இவர் இளம் வயதில் இருந்து தற்போது வரையிலும் அவருக்கு முக்கிய நண்பராக வலம் வருகிறார்.

vijay
vijay

விஜயின் பல்வேறு திரைப்படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் பத்ரி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அப்படி ஒருபடத்தின் ஷூட்டிங்கின்போது நடிகர் சஞ்சீவ் தெரியாமல் தண்ணீரில் விழுந்து விட்டாராம் அப்பொழுது திடீரென விஜய் அங்கிருந்து வந்து அவரை காப்பாற்றி உள்ளார் இதனை பேட்டி ஒன்றில் கூறினார் நடிகர் சஞ்சீவ்.