தமிழ் சினிமாவில் சிவகுமாரை தொடர்ந்து அவரது வாரிசுகளான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியவர்களும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தனது திறமையை வெளிக்காட்டி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர்.
நடிகர் கார்த்தி ஆரம்பத்தில் இயக்குனராக உருவாகத் தான் அதிக ஆசைப்பட்டார் ஆனால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்க தனது எண்ணங்களை முற்றிலுமாக மாற்றி நடிக்க ஆரம்பித்தார்.இவர் நடித்த முதல் படமான “பருத்திவீரன்” இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன.
அந்தவகையில் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன், கைதி ஆகியவை நடிகர் கார்த்தியை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்களை தன்வசம் வைத்திருக்கிறார் அந்தவகையில் நடிகர் கார்த்தி சர்தார், பொன்னியின் செல்வன், விருமன், கைதி 2 ஆகிய படங்கள் இருக்கின்றன.
இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் ஆரம்பத்தில் இவர் அண்ணன் நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தில் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது தனது ட்விட்டர் பக்கத்தில் நான் உதவி இயக்குனராக இருந்தபோது என் கதை எல்லாம் என்னுடைய அண்ணனுக்காக தான்.
.நான் இயக்குனர் ஆனால் அண்ணன் தான் ஹீரோ என குறிப்பிட்டிருந்தார்.இந்த செய்தியை ரசிகர்களின் சமூக வலைதளப் பக்கத்தில் எப்படியோ கண்டுபிடித்து அதை தற்போது இணையதள பக்கத்தில் ரசிகர்கள் வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.