நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன். முதலில் குழந்தை நட்சத்திரமாக கால் தடம் பதித்து பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். மற்ற நடிகர்களை விட உலகநாயகன் கமலஹாசன் வித்தியாசமான கதைகளில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி தொடர்ந்து வெற்றியை பதிவு செய்து முன்னணி நடிகராக மாறினார். மேலும் இவருக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.
இப்பொழுதும் இருந்து வருகிறது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது மேலும் விக்ரம் திரைப்படம் அண்மையில் 75 நாட்களை நிறைவு செய்தது. இத்திரைப்படம் இதுவரை சுமார் 420 கோடி வசூல் அள்ளியதாக கூறப்படுகிறது இந்த படத்தை அவர் தயாரித்ததன் மூலம் கமலுக்கு ஏகப்பட்ட லாபம் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இதனால் கமல் தற்பொழுது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம் இந்த படத்தை தொடர்ந்து ஷங்கரின் இந்தியன் 2 சபாஷ் நாயுடு, தேவர்மகன் 2, விக்ரம் 2 ஆகிய படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் முதலாவதாக கிடப்பில் இருக்கும் இந்தியன் 2 படத்தை முடிக்கவே கமல் அதிகம் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் கமலஹாசன் நடிப்பில் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு.
விளையாடு இந்த படம் திரில்லர், ஆக்சன், காதல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக உருவாகி இருந்தது இந்த படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தில் டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ், கமல், ஜோதிகா என பல பிரபலங்கள் நடித்திருந்தனர் இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதை இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டனர் ஆனால் அப்பொழுது எந்த அறிவிப்பும் வெளியே வரவில்லை..
ஆனால் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான தொடர்பு ஏற்கனவே இருந்ததால் இந்த படத்தை தற்போது எடுக்க கௌதம் மேனன் ரெடியாக இருக்கிறாராம் ஆனால் இப்போ தான் கதை எழுதி உள்ளாராம் விரைவில் கமலை சந்தித்து வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதையை சொல்லுவார் என்ன தெரிய வருகிறது கமல் ஓகே சொன்னால் உடனே வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாவது பாகத்தையும் எடுக்க ரெடியாக காத்துக் கொண்டிருக்கிறார் கௌதம் மேனன்.