ஜெயம்ரவி நடித்தால் அந்த படம் பிளாப்.? இவர் தான் நடிச்சிருக்கணும்.. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

JEYAM RAVI
JEYAM RAVI

தமிழ் சினிமா உலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் ஜெயம் ரவி ஆனால் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் தான் நடித்துள்ளார்  அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் கடைசியாக கூட இவர் நடித்த பொன்னியின் செல்வன் 1,2 போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக இறைவன், சைரன் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுராஜ் நடிகர் ஜெயம் ரவி பற்றி பேசியது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. சுராஜ் தனுஷை வைத்து மாப்பிள்ளை, படிக்காதவன் போன்ற படங்களை இயக்கியிருந்தார் மாப்பிள்ளை படத்தின் கதையை முதலில் தனுஷிடம் சொல்லும் பொழுது உடனே ஓகே சொல்லிவிட்டாராம் ஏனெனில் அந்த படத்தின் கதை..

தான் சொந்த கதையோடு ஒத்து போயிருந்ததால் உடனே ஓகே சொல்லி இருந்தார் அதேபோல படிக்காதவன் படத்தின் மூலம் தான் சுராஜ், தனுஷும் முதலில் ஒன்று சேர்ந்தனர். அந்தப் படத்தின் கதையை முதலில் சொன்ன போது படிக்காத பையன் படிச்ச பெண்ணை காதலிக்கும்படியான கதை இருந்ததால் அது மிகவும் பிடித்து இருந்தால் தனுஷ் சம்மதித்தாராம்.

தனுஷை தொடர்ந்து ஜெயம் ரவி வைத்து சகலகலா வல்லவன் என்ற படத்தை சுராஜ் இயக்கினார். உண்மையில் இந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டியது தனுஷ் தான் ஆம் சகலகலா வல்லவன் படத்தின் கதையை அவரிடம் சொல்லும் பொழுது ஆறு மாத காலம் காத்திருங்கள் என்று சொன்னாராம் ஆனால் சிராஜ்,  ஜெயம் ரவி தேடி இந்த கதையை சொல்ல இந்த படம் உருவானதாம்.. படத்தின் கதைப்படி  ஒரு மிடில் கிளாஸ் பையன் அவனுக்கு சமமான ரேஞ்சில் இருக்கும் பெண்ணை காதலிக்கிறார்.

ஆனால் அவரின் சொந்தக்கார பெண்ணாக இருக்கும் திரிஷாவுக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயம் நடந்து பாதிலேயே அந்த திருமணம் நின்று விடுகிறது. அந்த அவமானத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஜெயம் ரவி அப்பாவாக நடித்த பிரபு ஜெயம் ரவிக்கும், திரிஷாவுக்கும் திருமணத்தை நடத்தி வருகிறார் ஆனால் திரிஷாவுக்கு ஜெயம் ரவி கண்டாலே பிடிக்காது இங்குதான்  நான் தப்பு பண்ணிட்டேன் என்று சுராஜ் கூறினார்.

suraj
suraj

ஏனெனில் அடிப்படையில் ஜெயம் ரவி அழகானவர் ஆனால் திரிஷா திருமணம் செய்ய இருந்த அவர் நடிகர் ஜான் விஜய் அவருக்கு ஜெயம் ரவி 100 மடங்கு அழகானவர் அப்புறம் ஏன் ஜெயம்ரவியை த்ரிஷா வெறுக்கணும் என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க அதுதான் படம் எடுபடல என கூறினார் ஆனால் இதுவே நடிகர் தனுஷ் நடித்திருந்தால் இந்த மாதிரி ஒரு கன்பியூஷன் வந்திருக்காது அதனால் ஒரு படத்திற்கு இந்த நடிகர் தான் என்று இயக்குனர்கள் நினைத்து விட்டால் எந்த காரணத்திற்காகவும் அதை மாற்றாதீர்கள் என்று அந்த பேட்டியில் கூறினார்.