தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புக்காக பல கஷ்ட்டங்களை தாண்டி தற்போது முன்னிலை வகிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து வருகிறார் மேலும் இவர் பல திரைப்படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது அதில் கமல்ஹாசன், பகத் பாசில், நரேன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடித்திருப்பார்.
அதன் பின்னர் இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் வில்லன் கேரக்டரில் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஒரு பேட்டியில் இனிமேல் நான் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் பின்னர் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடிக்க ஒரு திரைப்படத்திற்கு 24 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் விஜய் சேதுபதியை தனது திரைப்படங்களில் நடிக்க கேட்க தயாரிப்பாளர்கள் சற்று தயங்குகிறார்கள்.
மேலும் நடிகர்கள் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அதனை தொடர்ந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.