போகிற போக்கை பார்த்தால் நானும் விஜய் போலவே மாறிவிடுவேன் போல..! படப்பிடிப்பு தள அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே..!

vijay-pooja

தளபதி விஜய் சமீபத்தில் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ள இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு பெரிய மதிப்பீடு உள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவ்வாறு இவர் நடக்க இருக்கும் திரைப்படத்தை நெல்சன் டிலிப்குமர் அவர்கள் இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் இயக்குனற்க்கு ஏற்ப இசையமைப்பாளரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளார் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் மிக சிறப்பாக முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு ஆனது சென்னையில் நடத்தப்பட்டு முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள மிகப்பெரிய ஸ்டூடியோ ஆனா கோகுலம் ஸ்டூடியோவில் மிக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டார். அப்பொழுது தளபதி விஜய்யுடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியது என்னவென்றால் தளபதியுடன் இருந்து நானும் அவரைப் போலவே மாறிவிடுவேன் போல என்று கூறியுள்ளார்.

இவ்வாறு உருவாகும் திரைப்படமானது முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக அமைவது மட்டுமல்லாமல் தனக்கும் இதில் ஏதேனும் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என  நடிகை பூஜா ஹெக்டே கூறி உள்ளார். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர்களுடனே வெகுநேரம் இருக்கத் தோன்றும் அப்படிப்பட்ட அனுபவத்தை இந்த பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நான் கண்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

pooja hegde
pooja hegde