தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மட்டுமின்றி பாடகர் இயக்குனர் என பன்முக திறன் கொண்ட ஒரு நடிகர் என்றால் அது டி ராஜேந்திரன் தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிம்புவின் தந்தை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக நடிகர் சிம்பு அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறு அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் பிரபல பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது பேசுகையில் சிலம்பரசனை பெற்றெடுத்தது நான் செய்த மிகப்பெரிய பாக்கியம் என்று கூறியுள்ளார்.
அந்த வகையில் நடிகர் சிம்பு அவர்கள் தான் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஆடியோ லான்ச் கூட தனது தந்தை உடல்நலக்குறைவின் காரணமாக தள்ளி வைத்துள்ளார் அதேபோல 10 தல படத்தின் படப்பிடிப்பையும் தள்ளி வைத்துள்ளார் சுமார் 12 நாட்கள் தனது தந்தைக்காக அமெரிக்காவில் அங்கு தன்னுடைய தந்தையாரை பார்த்து வருகிறார்.
அந்த வகையில் தான் தற்போது வெளிநாட்டிற்கு செல்வதற்கு காரணம் என் மகன் சிலம்பரசன் தான். அவருக்காக தான் நான் வெளிநாடு செல்கிறேன் தற்பொழுது சிஷ்யனாக வளர்ந்த குரு என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன் என டி ராஜேந்திரன் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சிலம்பரசன் நான் பெற்றெடுத்த மன்மதனாக மட்டுமில்லாமல் நல்ல மகனாகவும் எனக்காக இருக்கிறார் அதுவே எனக்கு போதும். மேலும் வல்லவனாக அவர் திரைப்படத்தில் நடிக்கவில்லை நல்லவனாக வாழ்க்கையில் இருக்கிறார் இவ்வாறு டி ராஜேந்திரன் அவர்கள் தன்னுடைய மகனைப் பற்றி பெருமையாக பேசிய வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.