இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான போது கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ரீ ரிலீசில் அமோக வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இசையமைத்த ஜீவி பிரகாஷை பலரும் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அந்த அளவிற்கு கூஸ் பம்சை கொடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வெளியானால் அதில் நான் நடிப்பேன் என ஒரு பேட்டியில் தனுஷ் அவர்கள் கூறியிருந்தார்.
அந்த தகவல் உண்மை என்கிற அளவிற்கு சமீபத்தில் பார்த்திபன் அவர்கள் ஒரு பேட்டியளித்துள்ளார் அதில் பார்த்திபன் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் தனுஷ் அவர்கள் தான் நடிக்க இருந்தது அதற்கு பதிலாக தான் நான் நடித்தேன் ஆனால் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் அவர்கள் என்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனக் கூறியிருந்தார்.
இன் நிலையில் தனுஷ் அவர்கள் செல்வராகம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்ச்சானத்தை பெற்று இருந்த நிலையில் அதனை தொடர்ந்து செல்வராகவன் தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார்.
செல்வராகவன் கூறியதாவது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை அப்பவே கொண்டாடியிருந்தார்கள் என்றால் இந்நேரம் ஆயிரத்தில் ஒருவன் மூன்று பாகத்தை எடுத்து முடித்து இருப்பேன் என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து ஆயிரத்தில் ஒருவன் மூன்று பாகங்களாக எடுக்க உள்ளதாக தற்போது கூறப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்காக பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு சோழர்களை தத்ரூபமாக காட்டி இருப்பார் செல்வராகவன்.மேலும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024ஆம் ஆண்டு வெளியாகும் என கூறபடுகிறது.