மாடல் அழகியும், நடிக்கியுமான நிதி அகர்வால் தெலுங்கில் ஆரம்பத்தில் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றுமே வெற்றி படங்கள்தான் அதனால் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் கிடுகிடுவென உயர்ந்தன.
ஒரு கட்டத்தில் தெலுங்கையும் தாண்டி தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் தமிழில் இவர் ஜெயம் ரவியின் பூமி மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை அடுத்தடுத்து பெற்றார் இந்த திரைப்படங்கள் இரண்டும் வெளிவந்து தோல்வியை தழுவின..
இருப்பினும் நல்ல கதைக்காக காத்திருந்த அவருக்கு மகழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான கலகத்தலைவன் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு சூப்பராக இருந்தது படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நிதி அகர்வால் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில நடிகர்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. எந்த ஹீரோ உடன் நடித்தால் நீங்கள் சம்பளமே வாங்காமல் நடிப்பீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு நீதி அகர்வால் “தனுஷ்” என கூறியுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் பற்றிய அவர் சொன்னது அவர் ஒரு நல்ல நடிகர் அவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது என கூறினார்.
அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நான் சம்பளமே வாங்க மாட்டேன் எனவும் கூறினார். மேலும் பேசிய அவர் எந்த ஹீரோ உங்களுக்கு அண்ணனாகவோ அல்லது தம்பியாகவோ நடிக்க கூடாது என கேட்டதற்கு அஜித் என கூறினார். அவருடன் நான் ஹீரோயின்னாக மட்டுமே நடிப்பின் என தெரிவித்தார்.