சினிமா பக்கம் வரலனா.. இந்த தொழில் தான் செய்திருப்பேன் – நடிகை நிதி அகர்வால் பேட்டி.!

nithi-agarwal-
nithi-agarwal-

தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் நடிகை நிதி அகர்வால் இவர் ஒரு மாடல் அழகியும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கில் நடித்த அனைத்து படமும் வெற்றி படம்தான் ஆனால் தமிழில் இவருக்கு அப்படி அமையவில்லை தமிழில் இவர் சிம்புவுடன் ஈஸ்வரன் ஜெயம் ரவியுடன் பூமி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்தார்.

இந்த இரண்டு படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தது அதன் பிறகு நடிகை நிதி அகர்வாலுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இருப்பினும் இவருக்கு ரசிகர்கள் ஏகபோகமாக உருவாகினர். அதற்கு காரணம் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது கவர்ச்சியை லைட் ஆவது இவர் காட்டி விடுவார் அதனால் ரசிகர்களுக்கு பிடித்தவராக மாறினார்.

ரசிகர்கள் இவருக்கு கோயில் எல்லாம் கட்டி அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை நிதி அகர்வாலுக்கு சினிமா வாய்ப்பு பெரிய அளவு இல்லை என்றாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நிதி அகர்வால் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார்.

அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக அவரிடம் நீங்கள் நடிக்க வரவில்லை என்றால் என்ன செய்திருப்பீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த நிதி அகர்வால் நான் நடிப்பில் ஜெயிக்கவில்லை என்றால் வீட்டில் விட்டிருக்க மாட்டார்கள் சம்பாதிக்க ஏதாவது ஒரு வேலைக்கு போ என்றுதான் சொல்லி இருப்பார்கள்..

nithi agarwal
nithi agarwal

நான் நடிகையாகவில்லை என்றால் ஃபேஷன் பிராண்ட் தொடங்கி இருப்பேன் பேஷன் டிசைனிங்கில் படித்துவிட்டு அதை செய்து இருப்பேன் என் குடும்பம் பிசினஸ் பின்னணி கொண்டது அந்த அறிவை கண்டிப்பாக தொழிலில் பயன்படுத்தி இருப்பேன் என நடிகை நிதி அகர்வால் கூறினார்.