சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் குழந்தைகள் கூட தற்போது முன்னணி நடிகைகள் உடுத்தும் உடையை அணிந்து மக்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கின்றனர் குழந்தை நட்சத்திரங்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சிறப்பாக வலம் வந்த அனிகா.
சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி முன்னணி நடிகைகளுக்கு இணையாக வந்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்த பல ரசிகர்கள் மட்டும் நெட்டிசன்கள் இந்த வயதில் இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை என்று கூறி வந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அடைய செய்து வருகிறார்.
அனிகா அவர்கள் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அஜித்திற்கு மகளாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இப்படத்தினை தொடர்ந்து மேலும் கடந்த ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம்.
திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ்நாட்டையும் தாண்டி இந்திய அளவில் அவர் பிரபலமடைந்தார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கின. அதன் பிறகு தான் அவர் போட்டோஷட் நடத்தி புகைப்படங்களை எடுத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை அனிகா அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் அவர் தனக்கு தளபதி விஜய் பிடிக்கும் எனவும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் வானத்திற்கும் , பூமிக்கும் துள்ளிக் குதிப்பேன் என்று உணர்ச்சிகரமாக பேசினார்.
என்ன தான் அஜித் படங்களில் நடித்தாலும் அவருக்கு என்னமோ விஜய் தான் பிடிக்குமாம். இத்தனை அறிந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.