தமிழ் சினிமாவில் தற்போது நம்பர்-1 நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கத்தில் தன்னுடைய 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை தில் ராஜு என்பவர் தான் தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பது மட்டுமின்றி இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உலகமெங்கும் வெளியாக உள்ளதாகவும் இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிக்க உள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்று சீரியல்நடிகை ஒருவர் தன்னுடைய ஆசையை வெளிக்காட்டி வருகிறார்.
சமீபத்தில் சீரியல் நடிகைகள் வெள்ளித்திரை நோக்கி படையெடுத்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நடிகைகள் சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபல முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் இடம் சினிமாவில் எப்பொழுது நடிக்க போகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு யாருமே எதிர்பாராத அளவிற்கு ஒரு பதிலை கொடுத்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் நான் சினிமாவில் நடித்தால் விஜய்க்கு தங்கையாக தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவருடைய ஆசைக்கு பல ரசிகர்களும் வாழ்த்து தெரிவிப்பது மட்டுமில்லாமல் பல சீரியல் நடிகைகள் பெரிய பெரிய கேரக்டர் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இவர் அப்படி ஒரு கதாபாத்திரம் கேட்டது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.