இவங்க இனி டீம்ல இருந்தா அவ்வளவுதான் சேவாக் அதிரடி.! யார் யாரை கூறுகிறார் தெரியுமா.?

sehwag
sehwag

இந்திய அனியின் முன்னாள் வீரர் சேவாக் அவர்கள் ஒரு பேட்டியில் அதிரடியாக பேசி உள்ளார் அவர் குறிப்பிட்டதை இவர்களை இனி நான் டீம்ல பார்க்கவே கூடாது என ஒரு சில இந்திய அணி வீரர்களை குறிப்பிட்டு கூறியிருக்கிறார் அவர் யார் யாரை பற்றி கூறியுள்ளார் என்பதை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

டி20 உலக கோப்பை 2022 தொடரின் அரையிறுதியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அதனைத் தொடர்ந்து டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றி வாய்ப்பை தட்டி தூக்கியது இந்திய அணி அதன் பிறகு தென்னாபிரிக்காவிடம் மட்டும்தான் தோற்று இருந்தது.

அணியின் வரிசையில் கோலி, சூர்யகுமார் யாதவ், ஆகியோர் தொடர்ந்து தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை ஆட இப்படியே வெற்றிகளை நோக்கி செல்ல ஆரம்பித்தது இந்திய அணி அஸ்வின், அக்சர் படேல், ஆகியோர் தொடர்ந்து ரண்களை வாரி கொடுக்க அதே வேளையில் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய சிறப்பான பந்துவீச்சால் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும் ஓபனர்களின் செயல்பாடு தான் பிரச்சனையாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

டி20 உலக கோப்பை 2022 சூப்பர்12 சுற்றில் பவர் பிளேவில் இந்திய அணி சராசரியாக ஆறு ரண்களை மட்டும் தான் அடித்தது இதற்கு காரணம் ஒப்பனர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் தான் என கூறப்படுகிறது ஃபார்மவுட்டில் இருந்த ராகுல் அதிக ரண்களை குவிக்க வேண்டும் என்பதற்காக துவக்கத்தில் இருந்து நிதானமாக விளையாட முயன்றார் ஆனால் நிதானமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது ஆட்டம் இழந்தார் ராகுல் அதேபோல ரோகித் சர்மாவும் இதே மனநிலையில் விளையாடி இருப்பார் என்று தெரிகிறது அரையிரதிலும் அதே விஷயத்தை தான் செய்திருக்கிறார் இதனால்தான் இந்திய அணி தோல்விக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

கிரிக்கெட் பொறுத்த வரை விரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் ஆனால் ரோகித் சர்மா அணியில் ஒரே ஒரு ஸ்பின்னர் சகலை சேர்க்கவில்லை மேலும் ஸ்பின்னர்கள் பந்து வீசியபோது ரிஷப் பந்தை களம் இறக்கவில்லை அதற்கு ஹர்திக் பாண்டியாவை தான் களம் இறக்கினார் ரோஹித் இப்படி இந்த மூன்று தவறால்தான் இந்திய அணி தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி தோல்வி அடைந்ததால் பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா உட்பட சீனியர் வீரர்கள் அனைவரையும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கை ஒன்ரிருக்குபேட்டி கொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது இரண்டு வருடங்களில் அடுத்த டி20 உலக கோப்பை வருகிறது அதற்கு இப்போது இருந்து யோசித்து இந்திய அணியை தேர்வு செய்தால் தான் கோப்பையை வெல்ல முடியும் அந்த வகையில் சரியாக செயல்படாத சீனியர் வீரர்களை அணியில் இருந்து விளக்க வேண்டும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் ஒரு பக்கம் கடுமையாக விமர்சனத்தை வைத்து வருகிறார்.