ஷங்கர் சினிமாவில் நடிக்க வந்திருந்தால் அவர்தான் – நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்துப்பார்.! பிரபல நடிகர் பேட்டி.

shankar-
shankar-

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமா உலகில் இதுவரை எடுத்த பெரும்பாலான படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான்  எடுத்தார். அந்த படங்கள் அந்த பட்ஜெட்டையும் தாண்டி பல கோடி லாபம் பார்த்து அசத்தி உள்ளது. அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், எந்திரன், 2.0, நண்பன், ஐ, சிவாஜி என சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்பொழுது கூட தமிழில் இந்தியன் 2 திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் ஷங்கர் பற்றிய பேச்சு ஒன்று இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பேசப்படுகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் சிங்கமுத்து.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஷங்கர் குறித்து பேசி உள்ளார். சங்கர் முதலில் நாடக மேடையில் நடித்து கொண்டு இருந்தார். பின் போன் எக்ஸ்சேஞ்சில் வேலை பார்த்தார் பிறகு எஸ் ஏ சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதே சமயம் படங்களில் அவ்வபொழுது காமெடியனாகவும் நடித்து ஓடிக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் நடிகர் சிங்கமுத்து படங்களில் நடிப்பதையும் தாண்டி டீக்கடை ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்த டீ கடைக்கு உதவி இயக்குனராக இருந்த ஷங்கரும் டீ குடிக்க வருவாராம் அப்பொழுது ஒரு தடவை சிங்கமுத்து ஷங்கருக்கு ஜோசியம் பார்த்தாராம். நீங்கள் மிகப்பெரிய ஒரு இயக்குனராக வருவீர்கள் என சிங்கமுத்து சொல்லி உள்ளார். ஆனால் ஷங்கர் அது வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டு சென்றாராம்.

ஆனால் சிங்கமுத்து சொன்னது போல ஷங்கர் மிகப்பெரிய ஒரு இயக்குனர் அவதாரம் எடுத்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களை வைத்து மிகப்பெரிய ஹிட் படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிங்கமுத்து ஷங்கர் சினிமா உலகில் இயக்குனராக ஆகவில்லை என்றால் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகனாக அவரும் இருந்திருப்பார் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு அவருக்கு காமெடி சென்ஸ் அதிகம் எனவும் தெரிவித்தார்.

singamuthu
singamuthu

ஏன் சிவாஜி படத்தில் ரஜினி ஆடு போல கத்துவார் அதை முதலில் யோசித்து சொன்னது ஷங்கர் தானாம் மேலும் சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு தலைகாட்டி போயிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.