அஜித் படம் முதலில் வந்துருந்தால் வசூலில் மிரட்டி இருக்கும் – பிரபல இயக்குனர் பேரரசு பேட்டி.!

ajith
ajith

அஜித், விஜய்யை வைத்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகரும் இயக்குனருமான பேரரசு இவர் 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய்யை வைத்து திருப்பாச்சி என்னும் ஆக்சன், சென்டிமெண்ட், காமெடி கலந்த திரைப்படத்தை கொடுத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களையும் தாண்டி மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தால் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக அப்பொழுது இருந்தது இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தினார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பேரரசு நடிகர் அஜித்தை வைத்து 2006ஆம் ஆண்டு எடுத்த திரைப்படம் தான் திருப்பதி.

இந்த படமும் கிட்டத்தட்ட  படம் போலவே மாஸ் ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக இருந்தது ஏற்கனவே திருப்பாச்சி படம் போல வே இந்த படமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று திருப்பாச்சி படம் ஓடியது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனரும் நடிகருமான பேரரசு சில சுவாரஸ்யமான விஷயங்களை புகழ்ந்துள்ளார் அதில் அவர் கூறியது திருப்பாச்சி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது என கூறினார் அதன் பின் வந்த திருப்பதி  படம் நன்றாக ஓடியது என கூறினார்.

உண்மையில் சொல்லவேண்டுமென்றால் திருப்பாச்சி படத்திற்கு முன்பாக திருப்பதி படம் வெளிவந்திருந்தால் நிச்சயம் அந்த படம் மிகப்பெரிய ஒரு வசூலை பெற்று இருக்கும் என கூறினார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.