தன்னை நம்பும் ரசிகர்களுக்காக சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி கடினமாக உழைத்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். சினிமா உலகில் ஆக்சன் காட்சிகளுக்கு டூப் இல்லாமல் நடித்து அசத்துகிறார் இது அவரது ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இவரது திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கின்றன.
அந்தவகையில் விசுவாசம், நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த நிலையில் அடுத்ததாக தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஹச். வினோத் இயக்கவுள்ளார் போனி கபூர் மீண்டும் அஜித்தை வைத்து இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கவுள்ளார்.
இது ஒரு பக்கமிருக்க அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்க ஒரு சில இயக்குனர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி ஒருவர்தான் வெங்கட்பிரபு இவர் அஜித்தை வைத்து ஏற்கனவே மங்காத்தா எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர்.
அதனைத் தொடர்ந்து அதே சாயலில் மங்காத்தா இரண்டாவது படத்தையும் எடுக்க ஒரு கதையை ரெடி செய்து வைத்துள்ளாராம். இதுவரை அஜித் ஆக்சன் சென்டிமெண்ட் ஆகிய படங்களில் சமீபகாலமாக நடித்து வருகிறார் அந்த வகையில் வித்தியாசமான ஒரு படமாக மங்காத்தா 2 இருக்கும் எனவும் எல்லாமே ரெடியாக இருக்கிறது.
எனவும் அஜித் தலை அசைத்தால் போதும் அவருடன் இணைந்து அடுத்த படத்தை இயக்குவேன் என கூறி உள்ளார். அஜித்தின் 62 மற்றும் 63 வது படத்தை இயக்க பல்வேறு சிறந்த இயக்குனர்கள் நிற்கின்றனர். அவர்களில் ஒருவராக வெங்கட்பிரபுவும் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.