Ajith : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் சமீபகாலமாக தனது படங்களில் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை அதிகம் திணித்து வருவதால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களும் இவரது படத்தை பார்க்க தற்பொழுது கூட்டம் குவிகிறது அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது.
அதனை தொடர்ந்து “விடாமுயற்சி” படத்தில் நடிக்க அஜித் தீவிரம் காட்டி வருகிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா தயாரிப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் துபாயில் நடக்கும் என சொல்லப்படுகிறது இந்த நிலையில் சினிமா பிரபலம் அந்தணன் அஜித்தைப் பற்றி பேசியது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.
பாலிட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கான் இன்று அவருடைய படம் தமிழ் மக்களிடையே வரவேற்பு பெற வேண்டும் என்பதற்காக அங்கிருந்து வந்து சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்தினார் அதோடு இல்லாமல் ஆயிரக்கணக்கில் குடியிருந்த மக்கள் மத்தியில் மேடை ஏறி நடனமாடி உற்சாகப்படுத்தினார்.
இந்த ஒரு பண்பு தமிழ் நடிகர்களிடம் யாருக்கும் கிடையாது என்றும், இனிமேலாவது இதை ஷாருக்கான் இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார் விஜயாவது அவருடைய ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களை சந்தித்தார். ஆனால் அஜித் சுத்தமாக செய்வதில்லை..
இப்படியே போனால் அஜித்தை யார் என்று கேட்கும் அளவிற்கு அவர் நிலைமை போய்விடும் எனக் கூறியுள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இத வேற எந்த நடிகருக்காவது சொன்னா கூட ஏத்துக்கெல்லாம் அஜித் எப்பொழுதும் எங்கள் மனதில் இருக்கிறார் அவரை யாராலும் அழிக்க முடியாது நாங்கள் கொண்டாடுவோம் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.