“அஜித்” இந்த ஒரு விஷயத்தை செய்தால் போதும்.. ரிலீஸுக்கு முன்பே 450 கோடி பார்க்கலாம்..

ajith
ajith

இரண்டு டாப் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் மோதினால் ரசிகர்கள் அதை பெரிய திருவிழாவாக கொண்டாடுவது வழக்கம்.. அந்த வகையில் எட்டு வருடங்களுக்கு பிறகு அஜித் – விஜய்  படங்கள் நேருக்கு நேராக மோதுகின்றனர். நடிகர் அஜித்குமார்  இயக்குனர் ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து துணிவு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில்  போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்துடன் கைகோர்த்து மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே   நடித்துள்ளனர் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ஸ் மூவி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இந்த படத்தை எதிர்த்து விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாகிறது. இந்த படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு படமாக ஒரு உள்ளது. விஜயுடன் கைகோர்த்து இந்த படத்தில்  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் லலித் குமார் ரிலீஸ் செய்கிறார்..

இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது துணிவு படம் தமிழகத்தில் ஜோராக வெளியாகினாலும், மற்ற முக்கிய இடங்களில் இன்னும் இந்த திரைப்படத்தை வாங்க யாருமே வரவில்லை என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. அதற்கு முக்கிய காரணம் அஜித் தனது படங்களில் நடிக்கிறார் மற்றபடி இந்த படத்தை பிரமோஷன் செய்வது என எதுவுமே இல்லை ஆனால் விஜய் அதற்கு அப்படியே எதிர் மாறாக உள்ளவர் படத்தை முடித்துக் கொடுத்தாலும்..

பிரமோஷன் செய்வதில் அவரை அடிச்சுக்க ஆளே இல்லை அதனால் தான் அவரது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது தமிழை தாண்டி அவருக்கு தெலுங்கு, கேரளாவிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. அஜித்  அவரது படத்தின் பிரமோஷனுக்கு வந்து வாய் திறந்து பேசினாலே போதும் அனைத்து ஏரியாக்களிலும் இவரது படம் ஜெயிக்கும் மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு 450 கோடி கிட்டத்தட்ட காசு பார்க்கலாம்.. அதை அஜித் செய்ய மறுக்கிறார்.