ஒரு நைட் வந்தா உனக்கு பட வாய்ப்பு.! உச்சகட்ட கோபத்தில் புகைப்படத்தை வெளியிட்ட அனிதா சம்பத்…

anitha-sampath
anitha-sampath

சன் தொலைகாட்ச்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரது மனதையும் கொள்ளையடித்தவர் தான் நடிகை அனிதா சம்பத். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4லில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரது வெறுப்பை வாரி கொட்டிக்கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடித்த அனிதா சம்பத் பின்னர் பிபி ஜோடிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடி வந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த மிக முக்கியமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான் அந்த ஷோவில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து வந்த அனிதா சம்பத் மிகவும் பிரபலமானார்.

இதனை அடுத்து பொதுவாக சினிமாவில் எப்படியாவது வாய்ப்புகள் பெற வேண்டும் என்று ஒரு சில பெண்கள் மற்றும் நடிகைகள் வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வது தற்போது அதிகமாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு அடி பணியவில்லை என்றால் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காதவாறு செய்து விடுவார்கள்.

இதற்கு ஏற்றார் போல அண்மையில் இளம் பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு பயன்படுத்த ஒருவர் அந்த இளம் பெண்ணை அழைத்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த பெண் யாரிடம் இதைப் பற்றி சொல்வது என்று குழப்பத்தில் இருந்து இருக்கிறார் பின்னர்  விஜய் டிவியில் பிரபலமான அனிதா சம்பத்திடம் அந்த நம்பர் கூறியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனிதா சம்பத்திற்கு அனுப்பி உள்ளார்.

இதைப் பார்த்த அனிதா சம்பத் மிகவும் கோபமடைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார். பட வாய்ப்பு தருகிறேன் எனக் கூறி இளம் பெண்ணை தவறான வழிக்கு அழைக்கும் இந்த மாதிரி சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என அனிதா சம்பத் பதிவு செய்துள்ளார்.

anitha
anitha