தமிழ் சினிமாவில் ரஜினி கமல் இவர்களை தொடர்ந்து சினிமாவில் முன்னிலை வகிப்பவரும் வசூலில் வல்லவனாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் சீட்டுக் கொடுத்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இவ்வாறு உருவான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் மூலமாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆனது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது மட்டுமில்லாமல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே அவர்கள் நடித்து வருகிறார். மேலும் இது திரைப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுகுமார் அவர்கள் தளபதி விஜயுடன் ஒரு திரைப்படம் நான் நிச்சயம் பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார் இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய சாதனை படைத்தது என்று சொல்லலாம்.
அதுமட்டுமில்லாமல் இந்த புஷ்பா திரைப்படமானது முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக நமது இயக்குனர் படத்தின் இறுதியில் தெரிவித்தது மட்டுமில்லாமல் சமீபத்தில் நமது இயக்குனர் நான் தமிழ் திரைப்படம் இயக்கினால் கண்டிப்பாக தளபதி விஜயுடன் பணியாற்ற வேண்டுமென கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.