மாஸ்டர் திரைப்படத்தை பார்த்து வியந்து போகாத சினிமா பிரபலங்களே இல்லை என்றுதான் கூறவேண்டும்.
ஏனெனில் மாஸ்டர் திரைப்படம் அவ்வளவு அருமையாக இருக்கிறது என பல சினிமா பிரபலங்கள் கூறியது மட்டுமல்லாமல் ரசிகர்களும் சமூக வலைதள பக்கங்களில் மாஸ்டர் திரைப்படம் வேற லெவலில் இருக்கிறது என கூறி வருகிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் தமிழக அரசின் உத்தரவை மீறி 100 சதவித ரசிகர்களை அனுமதித்ததால் சென்னை காசி தியேட்டர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சென்னை காசி தியேட்டர் கொரோனா தொற்று பயமின்றி 100 சதவீத ரசிகர்களை அனுமதித்தால் அந்தத் தியேட்டர் உரிமையாளரிடம் வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்று பயமின்றி தியேட்டர்களின் உரிமையாளர்கள் 100 சதவீத ரசிகர்களை அனுமதித்தால் கண்டிப்பாக அவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.