தமிழில் டம்மி டப்பாசு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். பின்பு ஜோக்கர், ஆண் தேவதை போன்ற ஒரு சில படங்களில் நடித்து ஓரளவிற்கு மக்களிடையே பிரபலம் அடைந்தார். இருந்தாலும் இவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்காததால் அதற்காக இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த வண்ணம் உள்ளார்.
இப்படி இருந்த நிலையில் இவருக்கு கிடைத்ததோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் கூட்டமே உருவாகின.
இந்த நிலையில் பின்பு இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது இந்த நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக விளையாடி பைனல்ஸ் வரை சென்றுள்ளார். பின்பு இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ரம்யா பாண்டியனுக்கு வெள்ளித்திரையில் பல்வேறு பட வாய்ப்புகள் வந்துள்ளது.
அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் வெளிவந்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பின்பு தற்போது இவர் இடும்பன் காரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன்இணைந்து ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின.
அதனால் ரம்யா பாண்டியன் தற்போது செம குஷியில் உள்ளார். இந்த நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று ரம்யா பாண்டியனிடம் சோசியல் மீடியாவில் விளம்பரதில் நடிக்க கேட்டுள்ளார். அதற்கு அவர் கூலாக 10 லட்சம் கொடுத்தால் நடிப்பேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் எதுவும் பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டனர்.