தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித் இவர் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்காததன் காரணமாக தொடர்ந்து அந்த திரைப்படத்தில் வேறு ஒரு கதாநாயகன் நடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு வெளிவந்த செய்தியானது தற்போது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதில் வெற்றிகரமாக பல்வேறு வெற்றிகளை கொடுத்த வருவர்தான் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த பல திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அந்தவகையில் இவர் இயக்கத்தில் வெளியான ராம், மௌனம் பேசியதே, பருத்திவீரன் ஆகிய அனைத்து திரைப்படங்களும் ஏன் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது மேலும் இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றில் இயக்குனர் அமீர் பேட்டி கொடுக்கும் போது அதில் பல தகவல்களை வெளிக் காட்டி உள்ளார்.
அதாவது அதில் அவர் கூறியது என்னவென்றால் தல அஜித்தை மனதில் வைத்துக்கொண்டுதான் ஆதிபகவான் என்ற திரைப்படத்தின் கதையை எழுதினாராம் ஆனால் அப்போது தல அஜித் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதன் காரணமாக வேறு ஒரு கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஜெயம்ரவி தேர்வானார்.
மேலும் இந்த திரைப்படம் உருவாவதற்கு முக்கிய காரணம் வரலாறு திரைப்படம் தான் ஏனெனில் வரலாறு திரைப்படத்தில் தல அஜித்தின் நடிப்பை பார்த்து வியந்த காரணமாக தான் நான் இந்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்க வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றார் ஆனால் அது முடியாமல் போன நிலையில் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுத்தது.