விஜய் மட்டும் இல்லன்னா எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்காது..! பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்..!

vijay-master
vijay-master

தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கைதி இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்த தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஒரு நடிகர் என்றால் அது அர்ஜுன் தாஸ் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அதன் பிறகு தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்த அசத்தியிருப்பார் இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் ஹிந்தியில் நமது நடிகருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் அங்கமாலி டைரிஷ் என்ற மலையாள  திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் நமது நடிகர் அர்ஜுன் தாஸ் அவர்கள் ஹீரோவாக நடிக்க உள்ளார் இந்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு சமூக வலைதளபக்கத்தில் வெளிவந்த மறுகணமே லோகேஷ் மற்றும் தளபதி விஜய்க்கு அர்ஜுன் தாஸ் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நான் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில்  விஜயுடன் இணைந்து நடிக்காமல் போயிருந்தால் கண்டிப்பாக இந்த வாய்ப்பு எனக்கு கிடைப்பதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை.

vijay-01
vijay-01

என்று கூறியது மட்டும் இல்லாமல் இவ்வாறு தனக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை முதன் முதலாக லோகேஷ் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரிடம் மட்டும் தான் கூறினேன் என அர்ஜுன் தாஸ் அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த அந்த தகவல் ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.