தென்னிந்திய திரையுலகில் சூப்பராக வலம் வரும் நயன்தாராவின் இடத்தை பிடிக்க தற்பொழுது பல தெனிந்திய நடிகைகள் தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அதிலும் சமந்தா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, காஜல் அகர்வால் போன்றவர்கள் நயன்தாராவை சினிமாவில் துரத்திக் கொண்டே வருகிறனர். இந்த லிஸ்ட்டில் அஜித் படத்தில் அவருக்கு மகளாக நடித்த அனிகாவும் வெகு விரைவிலேயே கலந்து உள்ளார் என்று கூறப்படுகிறது.
அனிகா பார்ப்பதற்கு நயன்தாரா போலவே இருப்பதால் ரசிகர்கள் பலரும் செல்லமாக குட்டி நயன்தாரா என்று கூறுகின்றனர் மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் நல்லதொரு வரவேற்பை பெறுகின்றன இதனால் இவரை சமூக வளைத்தளத்தில் பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அனிகா அது தவிர போட்டோ சூட்டின் மூலம் அவரது ரசிகர்களை தட்டி தூக்கிறார். அனிகா தற்போது சினிமா உலகில் உச்சத்தில் இருக்க காரணம் அஜித் தான் அவர் போட்ட பிள்ளையார் சுழி தான். மலையாளத்தில் ஓரிரு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அனிகாவுக்கு அப்போது எல்லாம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை ஆனால் தமிழில் அஜித்துடன் என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் அஜித்திற்கு மகளாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.
அதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வளரத் தொடங்கின தற்பொழுது அதை சரியாக பயன்படுத்தி தற்போது ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் பெறவுள்ளார். இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன இப்படி போய்க் கொண்டிருந்தால் இன்னும் நான்கைந்து வருடங்களில் நயன்தாரா இடத்தை பிடித்து விடுவார் என பலரும் கூறுகின்றனர்.
அனிகாவுக்கு மிகப்பெரிய ஆசை என்னவென்றால் இயற்கையோடு ஒன்றி இருப்பதுதான் என தெரியவந்துள்ளது. அவர் சொன்னது அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இவர் மஞ்சள் நிற உடையில் அருவி கொட்டும் இடத்தில் நின்று நடத்திய போட்டோ ஷூட் அப்படியே இருக்கிறது என கூறி அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.