அப்பா உதவி இல்லாமலேயே.. நான் சினிமாவில் ஜெயிச்சிருப்பேன் – விஜய் பேச்சு.!

vijay
vijay

ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருபவர் தளபதி விஜய் இவர் அண்மைக்காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள்தான் இப்பொழுது கூட தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை வேற லெவலில் இயக்கி வருகிறார்.

பிரம்மாண்ட பொருள் செலவில் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, யோகி பாபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் படத்தில் நடித்து வருகின்றனர்.  இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்த முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப்படபிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போக அதேசமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் லீக் ஆகி படகுழுவுக்கு தலைவலியை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் மீண்டும் ஒரு முறை லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் இதை பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது விஜய் அவரது அப்பா சந்திரசேகர் உதவியின் மூலம் தான் சினிமா உலகில் நுழைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர் இல்லை என்றாலும் சினிமா உலகில் விஜய் கொடி கட்டி பறந்து இருப்பார் என சொல்லப்படுகிறது.

vijay
vijay

விஜய் ஒரு தடவை என் அப்பா இல்லை என்றாலும் என்னால் சினிமா உலகில் ஜெயிக்க முடியும் ஆனால் கொஞ்ச நாள் ஆயிருக்கும் இப்படி உங்கள் முன் உட்கார.. மேலும் ஆல்பம், வீடியோ இதெல்லாம் இல்லை அவ்வளவுதான் வித்தியாசம் ஆனால் நானும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் என்று விஜய்யே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.