அவங்க மட்டும் அந்த கேரக்டர்ல நடிச்சா நான் சத்தியமா ஓடிப்போயிருப்பான்..! பிரபல நடிகையை பார்த்து மிரண்ட விக்ரம்..!

vikram-02
vikram-02

தமிழ் சினிமாவில் திரைப்படத்திற்காக தன்னையே மாற்றிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் தான் விக்ரம். அந்த வகையில் தான் நடிக்கும் திரைப்படத்திற்காக தன்னுடைய உடலை வருத்தி எடுத்துக்கொள்வது மட்டுமில்லாமல் தன்னுடைய தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு நடிப்பதில் விக்ரம் சிறந்தவர்.

அந்தவகையில் நடிகர் விக்ரமை பலரும் அந்த காலத்தில் ராசியில்லாத நடிகர் என்று கூறுவார்கள் ஆனால் தற்போது இவரை தமிழ்சினிமாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் முதன்முதலாக காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் இந்த திரைப்படத்தில் இவர் பெரிதும் பிரபலமாகவில்லை அதன்பிறகு நடித்த மீரா என்ற திரைப்படம் தான் இவரை தமிழ் சினிமாவில் பிரபலமாக்கியது. மேலும் இவர் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஓ பட்டர்பிளை என்ற பாடல்தான்.

அந்த திரைப்படத்தில் நடிகை லட்சுமியின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார் இவ்வாறு பல வருடங்கள் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆனாலும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள் ஆனால் அதில் இவர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவில்லை மாமியாராக நடித்திருந்தார்.

meera-1
meera-1

அதாவது சமீபத்தில் வெளிவந்த சாமி 2 இரண்டாம் பாகத்தில் தான் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நமது ஐஸ்வர்யா நடித்திருப்பார் இவ்வாறு அவர் நடிப்பதை அறிந்த விக்ரம் அவர்கள் நல்லவேளை மாமியாராக நடிக்க வைத்தீர்கள் அம்மாவாக நடிக்க வைத்திருந்தால் சத்தியமாக ஓடி இருப்பேன் என்று கோரியிருந்தார்.

ஏனெனில் இவர்கள் இருவரும் மீரா திரைப்படத்தில் ஜோடியாக நடித்தது நம் அனைவருக்குமே தெரியும் இந்நிலையில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருந்தால் யாரால் தான் அதை ஜீரணிக்க முடியும்.

aishwariya-1
aishwariya-1