தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1 நடிகையாக ஜொலிப்பவர் நயன்தாரா. அவருக்கு அடுத்த இடத்தை பிடித்து வெற்றிவரமாக ஓடிக்கொண்டிருப்பவர் சமந்தா இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் சின்ன சின்ன விளம்பர படங்களில் நடித்து பின் பட வாய்ப்பை கைப்பற்றினார். முதலில் இவர் “பானா காத்தாடி” படத்தில் ஹீரோயின்னாக நடித்து தனது அழகையும், திறமையையும் வெளிப்படுத்தி அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து இவர் நடித்த ஒவ்வொரு படமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதால் பிற மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தது குறிப்பாக தெலுங்கில் இவர் டாப் நடிகர்களுடன் நடித்து வெற்றி கண்டார் இப்படி ஓடிக்கொண்டிருந்த சமந்தா நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இந்த ஜோடி நான்கு வருடங்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது.
அதன் பிறகு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமந்தா கடைசியாக நடித்த “யசோதா” திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படி ஓடிக்கொண்டிருக்கும் சமந்தா மற்ற சினிமா நடிகை போல இவரும் அவ்வப்போது சோசியல் மீடியா பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத கிளாமரான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.
இதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர் இந்த நிலையில் சமந்தா ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார் அவரிடம் ஹீரோ, ஹீரோயின் இருவரும் சமமான ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்து உள்ளது அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்ட உள்ளனர்.
அதற்கு பதில் அளித்த சமந்தா நிச்சயமாக நானும் அதற்காக போராடத்தான் போகிறேன் ஆனால் என்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் வெற்றிகளால் உங்களுக்கு இந்த அளவு ஊதியம் கொடுக்கிறோம் என அவர்களே முன்வந்து கொடுக்கும்படி செய்வேனே தவிர யாரிடமும் சென்று எனக்கு சரி சமமாக சம்பளம் கொடுங்கள் என்று கெஞ்ச மாட்டேன் என நெத்தியடி பதிலளித்துள்ளார்.