தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகரின் படங்களுக்கு இசையமைத்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளார்.
மேலும் இவர் இசையமைக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்கள் தான் ஏன் சமீபத்தில் கூட வெளியான பீஸ்ட், விக்ரம் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட இவர் ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2 போன்ற படங்களுக்கு பிசியாக இசை அமைக்கிறார் மேலும் பெயிரிடாதப்படாத பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அனிருத்தின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு இசையமைத்துள்ளார் இந்த படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரபல இசை அமைப்பாளர் அனிருத் தனுஷ் உடன் சென்று திரையரங்கில் இன்று திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்த்து உள்ளார். அனிருத் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இவர் பேசியது தியேட்டருக்கு நான் கம்மியாக தான் போயிருக்கேன் நான் பெரிதும் ரஜினி, அஜித் படங்கள் தான் அதிகம் திரையரங்கில் பார்ப்பேன் அதன் பிறகு தனுஷ் படங்களை பார்ப்பேன் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் நான் அதிகமாக தியேட்டர்ல முதல் நாள் முதல் ஷோ பார்க்க மாட்டேன் முதல்ல தலைவர் படம் அப்புறம் தல படம் பார்ப்பேன் என வெளிப்படையாக பேசினார் இந்த செய்தியை ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இந்த செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.