அஜித், விஜய்க்கு கதை சொல்லுவேன்.. ஆனா இந்த ஸ்டைலில் தான் இருக்கும் – ஆர். ஜே. பாலாஜி பேட்டி

rj-balaji
rj-balaji

காமெடியன்னாக சினிமா உலகில் என்ட்ரி கொடுத்த ஆர் கே பாலாஜி தற்போது ஹீரோவாகவும், இயக்குனராகவும் தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். கடைசியாக போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தியில் வெளியான பதாய் கோ படத்தின் கதையை..

தமிழில் ரீமேக் செய்து தமிழில் வீட்டில் விசேஷம் என ரிலீஸ் ஆகியது படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று. அதை தொடர்ந்து அடுத்ததாக  லஷ்மன் குமார் தயாரிப்பில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவான ரன் பேபி ரன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் கோகுல் இயக்கத்தில் “சிங்கப்பூர் சலூன்” திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் அஜித், விஜய் குறித்து சில கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

எல்லோரிடமும் சொல்லிட்டேங்க.. தமிழ் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் உள்ளனர் டெக்னிக்கலா ஸ்ட்ராங்கா இருக்கிறவங்க.. ஆக்சன் படங்கள், பிரம்மாண்ட படங்கள் செய்யும் இயக்குனர்களும் இருக்காங்க.. ஆக்சன் படம் பண்ண விஜய் என்ன கூப்பிட்டு இருக்க மாட்டார். என்னுடைய ஸ்டாங் எதுவோ அதை படத்துக்கு உள்ள கொண்டு வருவேன் விஜய் சாரோட வாய்ப்பு கிடைக்கும் போது பண்ணுவேன்.

ஏற்கனவே விஜய் சாரை சந்தித்து கதை சொன்னேன் ஆனால் அந்த படம் நடக்கவில்லை டைம் அமையும் எதிர்காலத்தில் விஜய் சார்.. அஜித் சார்.. கதை சொன்னாலும் மூக்குத்தி அம்மன் படம் போல என்னுடைய அம்சங்கள் இருப்பது போல படம் பண்ணுவேன் என கூறி இருக்கிறார்.