தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் தற்போது எச் வினோத்துடன் இணைந்து மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான இரண்டு படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
ஆனால் இந்த முறை ஸ்கெட்ச் தப்பாது என்ற விதமாக முதல் பாடல் மூலம் நிரூபித்துள்ளார் எச் வினோத். ஆம் துணிவு திரைப்படத்திலிருந்து நேற்று வெளியான சில்லா சில்லா பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறது. இந்த முறை துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து சமுத்திரகனி மற்றும் மஞ்சு வாரியர் நடித்துள்ளார்கள் மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மூன்று பிக் பாஸ் பிரபலங்கள் நடித்துள்ளனர் ஆம் பிக் பாஸ்சில் பிரபலமான சிபி, அமீர், பாவனி, ஆகிய மூன்றும் பிக் பாஸ் பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் துணிவு திரைப்படத்தில் அமைந்துள்ள முதல் பாடலை ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் பாடியுள்ளார் இந்த படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களால் தேடப்பட்டு வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய ரசிகர் ஒருவர் ரஜினியை வைத்து படம் எடுத்தால் நீங்கள் எந்த படத்தை எடுப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார் ஏனென்றால் ஏற்கனவே கமலை வைத்து விக்ரம் படத்தின் சாயலில் உருவாக்கப்பட்ட விக்ரம் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அந்த வகையில் ரஜினியை வைத்து எடுத்தால் எந்த படத்தை எடுப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார் அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து எடுத்தால் தளபதி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக தான் இருக்கும் என கூறியுள்ளார். அதேபோல வேறு ஒரு ரசிகர் ஒருவர் நடிகர் அஜித்தை வைத்து படம் எடுத்தால் எந்த படத்தின் சாயலை வைத்து எடுப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார்.
இதுவரைக்கும் அமைதியாக இருந்த ரசிகர்கள் கூட்டம் அஜித் பெயரை கேட்டதும் அரங்கமே அதிரும் அளவிற்கு கூச்சலிட்டுள்ளனர். மேலும் அந்த ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் அஜித்தை வைத்து படம் எடுத்தால் அது தீனா படத்தின் இரண்டாவது பாகமாக தான் இருக்கும் என கூறியதும் ஒட்டுமொத்த ரசிகர்களுமே எழுந்திருத்து கைதட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள்.
ஏனென்றால் தீனா திரைப்படம் அஜித் அவர்களுக்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது அது மட்டுமல்லாமல் நடிகர் அஜித்தை ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற்றிய திரைப்படம் என்றால் அது தீனா திரைப்படம் தான் அந்த அளவிற்கு தீனா திரைப்படம் வெற்றி பெற்று இருக்கிறது அதேபோல தீனாவின் இரண்டாவது பாகத்தைப் பற்றி பேசி ரசிகர்களுக்கு மேலும் உற்சாகமூட்டியுள்ளார் இயக்குனர் லோகேஷ்.
தற்போது இயக்குனர் லோகேஷ் அவர்கள் தளபதி 67 திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். தளபதி 67 திரைப்படம் முடிந்தவுடன் ரஜினி அல்லது அஜித்தை வைத்து படத்தை உருவாக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக இதிலிருந்து தெரிகிறது. ஆனால் இது உறுதி செய்யப்படாத ஒரு தகவல் ரசிகர்கள் கேள்வி கேட்டதற்காக இந்த பதிலை கூறியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆனால் இவர் கூறியது நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.